ஹைதராபாத் :

மாநில நிதி ஒதுக்கீடு தொடர்பாக பேசிய பாஜக தலைவர் அமித்ஷாவை ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக சாடியுள்ளார்.

ஆந்திர மாநில தலைநகர் அமராவதியின் கட்டுமானத்திற்கான நிதியை அளித்த பிறகும் மாநில அரசு எந்த கட்டுமான பணியும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும், நிதி பயன்பாடு தொடர்பாக மாநிலம் அளித்த சான்றிதழ் பொய்யானது எனவும் பாஜக தலைவர் அமித்ஷா  கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு மாநிலத்தின் நிதி என்பது அந்த மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையிலான விவகாரம், இதுகுறித்து பேச பாஜக தலைவருக்கு எந்த உரிமையும் இல்லை என கூறினார். மேலும், அமித்ஷா ஏன் அரசின் நிர்வாக விவகாரங்களில் தலையிடுகிறார்? எனவும் கேள்வி எழுப்பினார்.

டெல்லி மெட்ரோவுக்கு 1 லட்சம் கோடி, குஜராத்தின் டோலேரா நகரத்திற்கு 98000 கோடி ரூபாயை ஒதுக்கிய மத்திய அரசு ஆந்திராவின் தலைநகர் அமைக்க வெறும் 1500 கோடியை அளித்துள்ளது எனவும் அவர் விமர்சித்தார்.

Leave A Reply

%d bloggers like this: