சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில், இரு பிரிவினரிடையே நடந்த மோதலில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

திருப்பாசேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று நள்ளிரவில் 50-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் வந்து, தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளைச் சூறையாடியுள்ளார்கள். மேலும் 8 பேருக்கு அறிவாள் வெட்டு ஏற்பட்டது.

இதில், ஆறுமுகம்(65) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் சண்முகநாதன் (39) என்பவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிசிச்சை பலனின்றி இறந்தார். மற்ற 6 பேரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். மாற்று சாதியினர் இருக்கக்கூடிய ஆவாரங்காடு, தஞ்சாக்கூர் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.