மும்பை:
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் வாகன டயர் உற்பத்தி நிறுவனமான சியெட்,கிரிக்கெட் அரங்கில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம்.

இந்நிலையில் 2018-ஆம் ஆண்டுக்கான சியெட் கிரிக்கெட் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சியெட் விருதுகள் விபரம்:

சிறந்த கிரிக்கெட் வீரர்: ரோகித் சர்மா (இந்தியா)
சிறந்த பேட்ஸ்மேன்: ஷிகர் தவான் (இந்தியா)
சிறந்த பந்துவீச்சாளர்: டிரன்ட் போல்ட் (நியூசிலாந்து)
சிறந்த இன்னிங்ஸ் விருது: ஹர்மன்பிரீத் கவுர் (இந்திய மகளிர்)
சிறந்த டி-20 பேட்ஸ்மேன்: காலின் முன்ரோ (நியூசிலாந்து)
சிறந்த டி-20 பந்துவீச்சாளர் : ரசித் கான் (ஆப்கானிஸ்தான்)
பிரபலமான வீரர்: கிறிஸ் கெயில் (விண்டீஸ்)
சிறந்த உள்ளூர் வீரர் : மாயங்க் அகர்வால் (இந்தியா)
சிறந்த இளம் வீரர் : சுப்மான் கில் (இந்தியா)
வாழ்நாள் சாதனையாளர் விருது : ஃபரோக் என்ஜினீயர் (இந்தியா)

Leave a Reply

You must be logged in to post a comment.