லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில், தெருநாய்கள் கடித்து மேலும் ஒரு சிறுமி பலியாகியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாய்க்கடித்து உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. சீதாபூர் மாவட்டத்தில் மட்டும் 14 குழந்தைகள் இதுவரை நாய்க்கடிக்குப் பலியாகியுள்ளன.

குழந்தைகள் தவிர, பெரியவர்களும் நாய்க்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். மோராபாத் பகுதியில் கடந்த 5 மாதங்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நாய்க்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஆனால், மாநிலத்தை ஆளும் பாஜக அரசு, இப்பிரச்சனையில் தொடர்ந்து அலட்சியமாகவே உள்ளது.இந்நிலையில், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள மோதிநகரில் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் மேலும் ஒரு சிறுமி உயிரிழந்துள்ளார். தெரு நாய்கள் கடித்துக் காயமடைந்த சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், சிகிச்சை பலன்றி அவர் இறந்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: