சென்னை:
செவ்வாய்க்கிழமை(மே29) சட்டமன்ற கூடும் நிலையில், திங்கட்கிழமை பிற்பகலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசு சார்பில் ஆணை வெளியிடப்பட்டது.

அந்த ஆணையை, தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலையின் சுவற்றிலும், கதவிலும் ஒட்டினர். பிறகு, இரும்பு சங்கிலிiயை கொண்டு பூட்டு போட்டு சீல் வைத்தனர்.
இதற்கிடையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ஸ்டெர்லைட் ஆலையை ஆலையை நிரந்தரமாக மூட க்கோரி தூத்துக்குடி மாவட்ட மக்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கை ஒட்டுமொத்த மக்களின் உணர்வு என்பதையும் எடுத்துக் கூறினர். எனவே, மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுகிறோம்” என அறிவித்தார்.

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவித்து வந்த அந்த ஆலையை நிரந்தரமாக மூடியதன் மூலம் நீண்ட காலமாக போராடி வந்த தூத்துக்குடி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்காக போராடி வரும் மக்களின் உணர்வுக்கும் மதிப்பளித்திருக்கிறோம். ஆகவே, போராடும் மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுகொண்டார்.

இந்த சந்திப்பின்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த முதலமைச்சர், ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கு எதிராக உச்சநீதிமன்றம் தடையாணை எதுவும் கொடுக்கவில்லை. வழக்கு மட்டுமே உள்ளதால், அந்த ஆலையை மாநில அரசு நிரந்தமாக மூடிவிட்டது என்றார்.

தமிழ அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு தொடர்ந்தால், அதை மாநில அரசு எப்படி கையாளும் என்ற மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில், “இது கற்பனையான கேள்வி; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றும் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: