ஐதராபாத்,
ஆந்திர மாநிலத்தில் ராட்டினம் அறுந்து விழுந்த விபத்தில் 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.  அங்கிருந்த  பிரம்மாண்ட மின்சார ராட்டினம் ஒன்றில் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஏறி அமர்ந்தனர்.  ராட்டினம் சுழன்று கொண்டிருந்த போது, திடீரென ஒரு பெட்டி மட்டும் கழன்று விழுந்தது. இந்த விபத்தில் அறுந்து விழுந்த பெட்டியில் இருந்த அம்ருதா என்ற 10 வயது சிறுமி உயிரிழந்தார். காயமடைந்த 6 பேர் அனந்தபூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ராட்டின ஆப்ரேட்டரை அப்பகுதியில் இருந்த மக்கள் பிடித்து , காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் ஆபரேட்டர் குடிபோதையில் இருந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: