மதுரை:
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் ஆரியப்பட்டியை சேர்ந்தவர் தோழர் ஜெயராமன்(42). இவர் கடந்த 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க சென்றார். அப்போது அங்கு நடந்த காவல்துறையின் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். அதில் மதுரை ஆரியப்பட்டியை சேர்ந்த ஜெயராமனும் பலியானார். இவர் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்.

ஜெயராமனுக்கு தந்தை நந்தன், தாய் தேனம்மாள், மனைவி பாலம்மாள், மகள் நந்தினி மற்றும் தங்கை பாண்டியம்மாள் ஆகியோர் உள்ளனர். மகள் நந்தினி (கல்லூரியில்) பயின்று வருகிறார்.
ஜெயராமனின் குடும்பத்தினரை மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.செல்லக்கண்ணு, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் வி.பி.முருகன், உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர் பி.ராமர், மாவட்டக்குழு உறுப்பினர் பி.எஸ்.முத்துப்பாண்டி, ஒன்றிய குழு உறுப்பினர் சி.பி.மகாராஜன், ஆரியப்பட்டி கிளைச் செயலாளர் ஜெகவீரன், நத்தப்பட்டி கிளை செயலாளர் பி.பரமன் மற்றும் கிளை உறுப்பினர்கள் ஆகியோர் ஜெயராமன் குடும்பத்திற்கு அவரது இல்லத்திற்கு சென்று நேரில் ஆறுதல் கூறினார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.