திருவாரூர்:
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க தமிழ்நாடு மாநில 9-வது மாநாடு திருவாரூரில் தோழர்களின் எழுச்சி முழக்கத்தோடு திங்கட்கிழமையன்று (மே-28) மாலை 5 மணியளவில் கோலாகலமாக துவங்கியது. தமிழ்நாடு முழுவதிலிருந்தும் நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் மாநாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.சங்கமம்
திருவாரூர் தெற்குவீதியில் வேதாரண்யம் தோழர் சி.பொன்னுசாமி நினைவரங்கில் (ஏகேஎம் டவர்) துவங்கிய மாநாட்டில் ஏற்றப்படுவதற்காக மாநாட்டு கொடிமரம், கொடிகயிறு, நினைவு ஜோதிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டு எழுச்சியோடு சங்கமித்தன. 50 ஆண்டு காலமாக நமது நெஞ்சங்களில் நீங்காமல் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிற வெண்மணி தியாகிகளின் நினைவு ஜோதியை நாகப்பட்டினம் தோழர்கள் வெண்மணியிலிருந்து ஜி.ஸ்டாலின் தலைமையில் மூத்த தலைவர் ஏ.வி.முருகையன் எடுத்து கொடுக்க கொண்டுவந்தனர். அந்த ஜோதியை சங்கத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.விஜயராகவன் பெற்றுக்கொண்டார். தேனி மாவட்டத்திலிருந்து ஏ.வி.அண்ணாமலை தலைமையில் மூத்த தலைவர் கே.இராஜப்பன் எடுத்துக் கொடுத்தசெங்கொடியினை கொண்டுவந்தனர். அதனை மாநிலத் தலைவர் ஏ.லாசர் பெற்றுக்கொண்டார்.

பாட்டாளி வர்க்கத்தின் நெஞ்சமெல்லாம் நிறைந்துள்ள தோழர்.வி.சீனிவாசராவ் துயில் கொண்டுள்ள திருத்துறைப்பூண்டி நினைவிடத்திலிருந்து திருவாரூர் மாவட்ட பொருளாளர் ஆர்.மணியன் தலைமையில் மூத்ததலைவர் பி.என்.தங்கராசு எடுத்துக் கொடுக்க ஒன்றிய நகர தலைவர்களும் தோழர்களும் தோழர் பிஎஸ்ஆர் நினைவு கொடிமரத்தை கொண்டுவந்தனர். அதனை சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.சங்கர் பெற்றுக்கொண்டார்.

சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட தியாகி ஜெ.நாவலன் நினைவு கொடி கயிற்றை பேரளத்தில் உள்ள அவரது நினைவிடத்திலிருந்து கே.எம்.லிங்கம் தலைமையில் மூத்த தலைவர் டி.அய்யாறு எடுத்துக்கொடுக்க நன்னிலம் ஒன்றிய முன்னணி தலைவர்களும் தோழர்களும் கொண்டு வந்தனர். அதனை சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ப.வசந்தாமணி பெற்றுக் கொண்டார். தஞ்சை மாவட்ட தோழர்கள் கே.பக்கிரிசாமி தலைமையில் தியாகிகள் இரணியன், சிவராமன், ஆம்பலாபட்டு ஆறுமுகம் நினைவு ஜோதியினை மூத்த தலைவர் ஆர்.மனோகரன் எடுத்துகொடுக்க கொண்டுவந்தனர். அதனை சங்கத்தின் மாநில பொருளாளர் வீ.அமிர்தலிங்கம் பெற்றுக் கொண்டார்.

பொது மாநாடு
அதன்பின்னர் சங்கத்தின் மத்திய கவுன்சில் உறுப்பினர் எஸ்.மொக்கராஜ் செங்கொடியினை தோழர்களின் வீரமுழக்கத்திற்கு இடையே ஏற்றி வைத்தார். மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமையில் பொது மாநாடு துவங்கியது. மாநில துணைச்
செயலாளர் ஏ.பழனிச்சாமி இரங்கல் தீர்மானம் முன்மொழிந்தார். வரவேற்புக்குழு தலைவர் ஐ.வி.நாகராஜன் திருவாரூர் மாவட்ட பெருமைகளையும் செங்கொடி இயக்க வரலாற்றையும் தியாகிகளின் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டு வரவேற்புரையாற்றினார்.பொதுச் செயலாளர் ஏ.விஜயராகவன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.பெரியசாமி மாநாட்டை வாழ்த்தி பேசினார். மாநில பொதுச்செயலா
ளர் ஜி.மணி வேலைஅறிக்கையையும் மாநிலப் பொருளாளர் வீ.அமிர்தலிங்கம் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

தலைவர்கள்
இம்மாநாட்டில் சங்கத்தின் அகில இந்தியதலைவர் எஸ்.திருநாவுக்கரசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மாநிலத்தலைவர் வீ.சுப்ர
மணியன், சின்னை.பாண்டியன், சிபிஐ விதொச மாவட்டச் செயலாளர் ஆர்.ஞான
மோகன் மற்றும் சங்கத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் பிரதிநிதி தோழர்
கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற உள்ள மாநாட்டில் இந்திய தொழிற்சங்க மைய (சிஐடியு) மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துரை வழங்கவுள்ளனர். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மாநாட்டை நிறைவு செய்து எஸ்.திருநாவுக்கரசு உரை
யாற்ற இருக்கிறார். நிறைவு நாளான புதன்கிழமையன்று (மே-30) பிரம்மாண்ட
மான உழைக்கும் மக்களின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் உரையாற்ற இருக்கிறார். மாநாடு வெற்றிகரமாக நடைபெற நூற்றுக்கணக்கான தோழர்கள் அயராது இரவு-பகல் பாராது பணியாற்றி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.