திருவள்ளூர்,
திருவள்ளூர் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆயில் மில் பகுதியில் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்களால் அடகு வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.6 கோடி மதிப்பிலான நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நகைகளுடன் வங்கியில் இருந்த ரூ.25 லட்சம் ரொக்க பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சனி, ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து இன்று காலை வழக்கம்போல் வங்கிக்குச் சென்ற ஊழியர்கள் லாக்கரில் உள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை கவனித்தனர். இதையடுத்து காவல் துறையினருக்கு வங்கி அதிகாரிகள் தகவல் அளித்தனர்.
தற்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவி சக்ரவர்த்தி தலைமையில், முதல்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. எதையும் உடைக்காமல், லாக்கரை திறந்து கொள்ளை அடைக்கப்பட்டுள்ளதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கிக் கொள்ளை தொடர்பாக மேலாளர் சேகரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: