கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியின் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா மீது ரியல் மாட்ரிட் வீரர் ஜெர்ஜியோ ரமோஸ் செய்த பவுலில் முகமது சாலாவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு 25-வது நிமிடத்தில் கண்ணீரோடு வெளியேறினார்.முகமது சாலாவின் காயம் குறித்து அறிக்கை வெளியிட்ட லிவர்பூல் அணி நிர்வாகம் காயத்தின் வீரியம் அதிகமாக இருப்பதால் ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் சாலா களமிறங்குவது சந்தேகம்தான் என அதிர்ச்சி முடிவை அறிவித்துள்ளது.எகிப்து வீரரரான முகமது சாலா உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இருந்தபோதிலும் எகிப்து கால்பந்து கழகம் முகமது சாலா காயத்திலிருந்து விரைவில் குணமடைந்து உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவார் என தெரிவித்துள்ளது.முகமது சாலா எகிப்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாவார். அவர் இல்லையேல் எகிப்து அணி இல்லை.சாம்பியன்ஸ் லீக் சீசனில் முகமது சாலா மொத்தம் 44 கோல் அடித்துள்ளார்.இந்த முறை லிவர்பூல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நிலையில் முகமது சாலா காயம்பட்டு வெளியேறியது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

முகமது சலாவிற்கு காயத்தை ஏற்படுத்திய ரியல் மேட்ரிட் அணித் தலைவர் ஜெர்ஜியோ ரமோஸின் செயலை விமர்சித்த லிவர்பூல் பயிற்சியாளர் ஜூர்கென் க்ளோப் “ஜெர்ஜியோ ரமோஸ் மல்யுத்தப் போட்டி போல கால்பந்து விளையாட்டை விளையாடி வருகிறார் கூறினார்.கோப்பையை வென்ற ரியல் மாட்ரிட் அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் மீண்டும் சாம்பின்ஸ் லீக் போட்டியில் கோப்பையை வென்றுள்ளது சாதாரணக் காரியமல்ல. இருந்தபோதிலும் நாங்கள் தோற்றதற்கு முகமது சாலாவிற்கு ஏற்பட்ட காயமும் முக்கியக் காரணமாகும்.மிகவும் மோசமான ஒரு தவறை ரமோஸ் செய்துள்ளார்.ஏதோ மல்யுத்தப் போட்டியில் விளையாடுவது போன்று விளையாடி வருகிறார். முகமது சாலாவின் காயத்தால் திகைத்துப் போன் லிவர்பூல் வீரர்கள் மீண்டு வருவதற்குள் ரியல் மாட்ரிட் வீரர்கள் ஆட்டத்தைத் தங்கள் பக்கம் கொண்டுசென்று விட்டார்கள். விளையாட்டு முடிந்த பின்பு இதுபோன்ற வீரர்களின் பவுல் குறித்து விமர்சிப்பது சரியில்லை என்ற போதிலும் அதன் காரணமாக நாங்கள் தோல்வியைத் தழுவியது மிகுந்த ஏமாற்றததை அளித்தது என்று ஜூர்கென் க்ளோப் தெரிவித்தார்.

 11-வது உலக கோப்பை:                                                                                                                                                               11-வது உலக கோப்பை கால்பந்து தொடர் 1978-ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவில் நடைபெற்றது.தொடர் நடக்கும் சமயம் அர்ஜெண்டினாவில் ராணுவ ஜெனரல் விடேலாவின் சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.உலகக் கோப்பை கால்பந்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கொரில்லா குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவமானது போட்டியில் பங்கேற்கும் நாடுகளுக்கு பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.சர்வாதிகார போக்கு மற்றும் மனித உரிமை மீறலை கண்டித்து பல நாடுகள் தொடரை புறக்கணிக்க முடிவு செய்தனசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) தலையிட்டு சமரசம் செய்தது.உலகக் கோப்பை போட்டியின் போதுதான் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த துனிசியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது உலக கால்பந்து ரசிகர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.

இறுதி போட்டியில் அர்ஜெண்டினா,நெதர்லாந்து அணிகள் மோதின.ஆட்ட நேர முடிவில்,இரு அணிகளும் 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் இருந்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.கூடுதல் நேரத்தில் அர்ஜெண்டினாவின் மரியோ கெம்பஸ்,பெர்டோனி தலா ஒரு கோல் அடிக்க இறுதியில் அர்ஜென்டினா 3-1 என்ற கோல்கணக்கில் வென்று முதன் முறையாக உலக கோப்பையை முத்தமிட்ட்டது.இத்தொரில் அர்ஜெண்டினா வீரர் மரியோ கெம்பஸ் தங்க காலணியை (6 கோல்கள்) கைப்பற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.