கோவை,
கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் நடத்திய வாகன சோதனையில் 18 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து கோவை மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு ரேசன் பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனைகள் மூலம் ரேசன் பொருட்கள் கடத்தப்படுவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்தஏப்ரல் மாதம் நடத்திய சோதனையில் 18 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி, 30 லிட்டர் பாமாயில், 50 லிட்டர் மண்ணென்ணை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடத்தலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: