திண்டுக்கல்,
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டு கொடிப்பயணத்திற்கு திண்டுக்கல், வடமதுரையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் உழவர் சந்தை அருகே சங்கத்தின் ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலச் செயலாளர்கள் ஏ.வி.அண்ணாமலை, பி.வசந்தாமணி தலைமையிலான பயணக்குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கொடிப்பயணத்தை வரவேற்று சங்க மாவட்டச் செயலாளர் அருள்செல்வன், ஒன்றியநிர்வாகிகள் அம்மையப்பன், பழனிச்சாமி, ராஜாமணி, செந்தில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் அஜாய்கோஷ், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் சரண்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

வடமதுரையில் கொடிப்பயணக் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் கே.அருள்செல்வன், பொருளாளர் ஆர்.கண்ணன், ஒன்றிய நிர்வாகிகள் எம்.கே.சம்சுதீன், சுப்பையா, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, ஒன்றியச் செயலாளர் மலைச்சாமி, வாலிபர் சங்கஒன்றியச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

(நநி)

Leave A Reply

%d bloggers like this: