தாராபுரம்,
மணல் கொள்ளையர்களால் மணல் நிறைந்த அமராவதி ஆறு மேய்ச்சல் நிலமாக மாறிவருகிறது.

தாராபுரம் பாசன பகுதி விவசாயிகளுக்கு நீராதரமாகவும், உயிராதாரமாகவும் விளங்குவது அமராவதி ஆறு. அமராவதி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் உடுமலை, மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு,வழியாக சிக்கினாபுரம், செலாம்பாளையம் வழியாக தாராபுரம் நகரை கடந்து கரூர் வரை செல்கிறது. மேலும், பல லட்சக்ககணக்கான பொதுமக்களும் குடிநீருக்காக இந்த ஆற்றையே நம்பி உள்ளனர். தாராபுரம் பகுதியில் உள்ள பழைய மற்றும் புதிய அமராவதி ஆயக்கட்டு உட்பட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக மழையளவு குறைந்ததால் பெரும்பாலான நாட்களில் அமராவதி ஆற்றில் நீர்வரத்து என்பது இருக்காது. இருந்தாலும் 5 வருடங்களுக்கு முன்பெல்லாம் அமராவதி ஆற்றில் ஊற்று தோண்டினால் நீர் பெருக்
கெடுக்கும். ஆனால் கடந்த 2 வருடங்களாக ஊற்று தோண்டுவதற்கு கூட இயலாதவகையில் மணல் கொள்ளை நடைபெற்று அந்த இடங்களில் புல்கள் முளைத்து மேய்ச்சல் நிலமாக மாறி ஆடு, மாடுகள் ஆற்றிக்குள் மேயும் அவலம் உருவாகிவிட்டது. இதற்கு முழு காரணம் அமராவதி ஆற்றுபடுகைகளில் நடைபெறும் மணல் திருட்டு ஆகும். பரந்த விரிந்த அமராவதி ஆற்றில் மணல் நிறைந்த சங்ரண்டாம்பாளையம், கவுண்டையன்வலசு, கரையூர், அலங்கியம் அமராவதி ஆற்றுபாலம், கொங்கூர் மற்றும் கரூர்மாவட்டம், திருப்பூர் மாவட்ட எல்லைபகுதியான ஒத்தமாந்துறை வரை சுமார் 20 இடங்களில் இரவு நேரங்களில் மணல் திருட்டு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆற்றின் உள்ளே பாதை அமைத்து கனரக இயந்திரங்களை கொண்டு ஆற்றிலேயே இயந்திரங்களை இறக்கி 10 அடி ஆழம் வரை ,அதாவது வண்டல் மண் உள்ள பகுதி வரை மணலை லாரிகளில் அள்ளி சென்றுவிடுகின்றனர். இதனால் அப்பகுதியில் புல் முளைத்து மேய்ச்சல் நிலமாக மாறிவிட்டது.  குறிப்பாக கொளிஞ்சிவாடி, பழைய அமராவதி பாலம் மற்றும் புதிய அமராவதி பாலத்தின் கீழ் பகுதியிலுள்ள மணலை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றுவிட்டதால், அந்தப் பகுதியை புல்வெளியாக மாறிவிட்டது. அமராவதி ஆறு முற்றிலும் புல்வெளியாக மாறுவதற்குள், தற்போது உள்ள மணலையாவது கடத்துவதை அதிகாரிகள் தடுத்து
நிறுத்தவேண்டும் என பொது மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.