ஈரோடு,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து ஈரோட்டில் எழுத்தாளர்கள் மற்றும் அறிவியல் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேராசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார். தமுஎகச மாவட்ட துணை செயலாளர் கலைகேவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசன், மாவட்ட செயலாளர் சங்கரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: