தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மே 22-ஆம் தேதி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு, தடியடி தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட் டுள்ளது. அதில் ஏழு பேரின் உடல்கள் கூடற்கூராய்வு செய்யப்பட்டுவிட்டது. ஆறு பேரின் உடல்கள் உடற்கூராய்வு செய்ய வேண்டியுள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் (பார் அசோசியேசன்) துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை ஞாயிறன்று சென்றுபார்த்து ஆறுதல் கூறினர்.பின்னர் அவர்கள் கூறியதாவது: காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடலை உடற்கூராய்வு செய்யும்போது இரண்டு மருத்துவர்கள், இரண்டுவழக்கறிஞர்கள், இறந்தவரின் உறவினர் ஒருவர் உடனிருக்கவேண்டும். ஏற்கனவே உடற்கூராய்வு செய்தவர்களின் உடலை மீண்டும் உடற் கூராய்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.