தேனி:
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 9-ஆவது மாநில மாநாடு திருவாரூரில் மே 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேனியில் கொடிப் பயண துவக்க நிகழ்ச்சி மாவட்ட பொருளாளர் கே.தயாளன் தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் விவசாயிகள் சங்கதலைவருமான கே. ராஜப்பன் கொடியினை எடுத்துக் கொடுத்து துவக்கி வைத் தார். நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன் வாழ்த்திப்பேசினார்.

கொடிப்பயணக் குழு தலைவர் ஏ.வி.அண்ணாமலை, கொடிப்பயணக்குழு உறுப்பினர்கள் பி.
வசந்தாமணி, எஸ்.மொக்கராஜ், புதுக்கோட்டை சண்முகம் ஆகியோர் உடனிருந்த
னர். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கண்ணன், மாவட்ட
துணைத்தலைவர் எல்ஆர்.சங்கரசுப்பு, சிஐடியு மாவட்ட தலைவர் சி.முருகன், விவ
சாயத் தொழிலாளர் சங்கமாவட்ட உதவி செயலாளர்கள் சி.வேலவன், ஜி.முத்துகிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் இ.தர்மர், சிபிஎம் தாலுகா செயலாளர் சி.சடையாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வரவேற்பு கொடிப் பயணக்குழு விற்கு க.விலக்கு, ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் எஸ்.ராமர், விவசாயிகள் சங்க தலைவர் வி.சின்னன், ஒன்றிய செயலாளர் பி.ராமன், வி.தொ.ச. ஒன்றிய செயலாளர் எஸ்.அய்யர் ரெங்கநாதன் மற்றும் போஸ்
உட்பட பலர் கலந்துகொண்டனர். திமுக விவசாயத் தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கே.சங்கரலிங்கம் பயணக்குழுவினரை வரவேற்று சால்வை அணிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: