சென்னை:
மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலை யை நிரந்தரமாக மூடக்கோரி போராடுகின்ற மக்களையும் எதிர்க்கட்சி தலைவர்களை
யும் பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி
மக்கள் கடந்த 100 நாட்களுக்கு மேலாக அனைவரும் போராடி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் அதற்கு ஆதரவளித்து இயக்கங்கள் நடத்தி வருகின்றன.
மாநில அரசின் சர்வாதிகாரப் போக்கால் தமிழக காவல்துறை போராடிய மக்கள் மீது திட்ட
மிட்டு நடத்திய போலீஸ் துப்பாக்கிச்சூட்டின் விளைவாக 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான பேர் போலீசாரின் துப்பாக்கிக் குண்டு களாலும், தடியடிகளாலும் தாக்கப்பட்டு குற்றுயிரும், கொலை உயிருமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த படுகொலைக்கு எதிராக தமிழகமே கொந்தளித்து தமிழக அரசிற்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பி வருகிறது. அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு இயக்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க வெள்ளியன்று முழு கடையடைப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும்  மறியல் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

துப்பாக்கிச் சூடு நடைபெற்று அதனால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற, மற்றும் படுகாயமடைந்தவர்களை பார்க்கச் சென்ற கே.பாலகிருஷ்ணன், மு.க.ஸ்டாலின், ஆர்.முத்தரசன், எஸ். திருநாவுக்கரசு, வைகோ, தொல்.திருமாவளவன் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரின் மீதும் 144 தடையுத்தரவை மீறியதாக வழக்கு தொடர்ந்து தனது
எதேச்சதிகார ஜனநாயக விரோதப்போக்கை மாநில அரசு கையாண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த கண்டன இயக்கத்தில் கைது செய்யட்டவர்கள் அனைவரும் அன்றே விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் தமிழகத்தில் சில இடங்களில்
வழக்கத்திற்கு மாறாக பழிவாங்கும் நோக்குடன் கைது செய்யப்பட்டவர்களை ரிமாண்ட் செய்வது, துன்புறுத்துவது போன்ற நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகிறது காவல் துறை.
குறிப்பாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சார்ந்த தோழர்கள் சேலத்தில் 20 பேர்களும்,
சென்னையில் 6 பேர்களும் ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் வெள்ளியன்று தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் கலந்து கொண்டு துப்பாக்கிச்சூட்டி
னால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்ற போது போலீசாரால் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசு மற்றும் காவல்துறை யினரின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையையும், அராஜகப் போக்கையும் கண்டிப்பதோடு, கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்திட வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

Leave A Reply

%d bloggers like this: