புதுதில்லி:
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தியாவின் முக்கியமான ஊடகங்களை இந்துத்துவ சக்திகள் விலைபேசி, தங்களுக்குச் சாதகமான செய்திகளையும், சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் செய்திகளையும் வெளியிடத் தூண்டுகின்றன என்றும் ‘ஸ்டிங்  ஆப்பரேஷன்’ மூலம் இது உறுதியாகிறது என்றும் கோப்ராபோஸ்ட் இணைய தள ஊடக நிறுவனத்தினர் கூறுகின்றனர். இந்துத்துவத்துக்கும் அது சார்ந்த கட்சிக்கும் ஆதரவாகப் பிரபல பெரு ஊடக நிறுவனங்கள் பெருமளவு பணம்வாங்கிக்கொண்டு செயல்படத் தயாராக இருப்பதாக இரு மாதங்கள் முன்பு
கோப்ராபோஸ்ட் செய்தி வெளியிட்டது. இதனையடுத்து இந்துத்துவ சக்தியினர் என்று கூறிக்கொண்டு இந்தியா முழுவதும் தினமலர் நாளிதழ் உள்பட சுமார் 24 ஊடக நிறுவனங்களை கோப்ரா போஸ்ட் பத்திரிகையாளர்கள் அணுகினர். இந்த ‘ஸ்டிங் ஆப்பரேஷ’னில் ஊடகங்கள் விலைபோனதை வீடியோ பதிவுடன் வெளியிட்டுள்ளது கோப்ராபோஸ்ட்.

Leave a Reply

You must be logged in to post a comment.