மும்பை:
ஐபிஎல் தொடரின் 11-வது சீசன் போட்டிகள் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.‘லீக்’ சுற்று முடிவில் ஹைதராபாத், சென்னை,கொல்கத்தா,ராஜஸ்தான் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

‘பிளேஆப்’ சுற்று ஆட்டங்கள் மே 22-ஆம் தேதியன்று தொடங்கியது.‘பிளேஆப்’ சுற்றின் ‘குவாலிபையர்-1’ ஆட்டத்தில் சென்னை-ஹைதராபாத் அணிகள் மோதின.பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் மோதிய எலிமினேட்டர் (வெளியேற்றுதல் சுற்று) ஆட்டத்தில் கொல்கத்தா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வெளியேற்றியது.‘குவாலிபையர்-2’ ஆட்டத்தில் ஹைதராபாத் அணி கொல்கத்தாவை 14 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.இறுதிப் போட்டி நாளை இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.