கொழும்பு:
இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க இலங்கைக்கு மேற்கொண்டது.
காலே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த ஆட்டத்தில் சூதாட்டம் நடைபெற்றதாக அரபு செய்தி நிறுவனம் நிறுவனமான அல் ஜசீரா ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. இதேபோல் 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே காலே மைதானத்தில் இலங்கை-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியிலும்,2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான இங்கிலாந்து போட்டியிலும் சூதாட்டம் நடைபெற்றதாக அல் ஜசீரா ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) துரித விசாரணையை தொடங்கியுள்ளது.கிரிக்கெட் சூதாட்டகாரர்கள் தொடர்பான ஆதாரங்களை அல் ஜசீரா இன்று (ஞாயிறு) மாலை 3.30 மணிக்கு ஒளிபரப்பு செய்கிறது.

Leave A Reply

%d bloggers like this: