கோவை,
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இவ்வாண்டிற்கான தென்மேற்கு பருவ மழை சராசரியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் 2018 ம் ஆண்டிற்கான தென்மேற்குப் பருவ மழைக்கான (ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை) முன்னறிவிப்பு தொடர்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள வேளாண் காலைநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பசிபிக்பெருங்கடல் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் எனும் கனிணி கட்டமைப்பைக் கொண்டு 2018 ம் ஆண்டிற்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

இதில் கோவை மாவட்டத்தின் சராசரி மழையளவு 189.8 மி.மீ ஆகும். தற்போது எதிர்பார்க்கப்படும் மழையளவு 213 மி.மீ ஆகும். திருப்பூரின் சராசரி மழையளவு 154.8 மி.மீ., எதிர்பார்க்கப்படும் மழையளவு 123 மிமீ. ஈரோடு மாவட்டத்தின் சராசரி மழையளவு 229.8 மி.மீ, எதிர்பார்க்கப்படும் மழையளவு 200 மிமீ ஆகும்.இதேபோல் சேலம் மாவட்டத்தின் சராசரி மழையளவு 440.6, எதிர்பார்க்கப்படும் மழையளவு 391 மி.மீ.,. நீலகிரி மாவட்டத்தின் சராசரி மழையளவு 759.6 மி.மீ., எதிர்பார்க்கப்படும் மழையளவு 772 மி,மீ., நாமக்கல் மாவட்டத்தின் சராசரி மழையளவு 339.3 மி.மீ., எதிர்பார்க்கப்படும் மழையளவு 376மி.மீ., ஆக இருக்கும் என கோவை வேளாண்மை பல்கலைக்கழத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.