பனாஜி:
கோவா மாநிலத்தில், பாஜக கூட்டணியிலிருக்கும் ‘கோவா பார்வர்டு கட்சி’ திடீரென கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

40 இடங்களுக்கான கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. பாஜக-வுக்கு 13 இடங்களே கிடைத்தன. தேசியவாத காங்கிரஸ் ஓரிடத்திலும், கோவா பார்வர்டு கட்சி 3, மகாராஷ்ட்டிரவாதி கோமந்தக் கட்சி 3, சுயேட்சைகள் 3 என்ற எண்ணிக்கையில் வென்றனர். எனினும் ஆளுநரின் தயவில், சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சிகளை வளைத்து பாஜக ஆட்சியில் அமர்ந்தது.இந்நிலையில், 3 எம்எல்ஏ-க்களைக் கொண்ட கோவா பார்வர்டு கட்சி தலைவரும், மாநில அமைச்சருமான விஜய் சர்தேசாய், அரசிலிருந்து வெளியேறப் போவதாக கூறி, பாஜக பதற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார். ‘கோவாவில் சுரங்கம் தோண்ட தடை விதிக்கப்பட்டதால் பெரும் பிரச்சனை நிலவி வருகிறது; இதை முடிவுக்கு கொண்டு வர பாஜக முயற்சி எடுக்க வேண்டும்; இல்லையென்றால் மாநில அரசில் இருந்து வெளியேறுவோம்’ என்று அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: