லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க அலகாபாத் நகரத்தின் பெயரை, ‘பிரயாக் ராஜ்’ என்று மாற்ற, அந்த மாநிலத்தை ஆளும் பாஜக அரசு முடிவு செய்துள்ளது.அலகாபாத்தின் பெயரை ‘பிரயாக் ராஜ்’ என மாற்றும் முயற்சி, 2001-ஆம் ஆண்டு, அப்போதைய பாஜக ஆட்சியிலும் நடந்தது. ராஜ்நாத் சிங், அப்போது முதல்வராக இருந்தார். அன்றைய ஆளுநர் விஷ்ணுகாந்த் சாஸ்திரியும் பெயர் மாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்தார். ஆனாலும், பெயர் மாற்றப்படவில்லை.

இதனிடையே, ஆதித்யநாத் முதல்வரானதும், அலகாபாத்தின் பெயரை ‘பிரயாக்ராஜ்’ என மாற்றும் கோரிக்கையை அகில இந்திய அகாடா பரிஷத் (அகில இந்திய சாதுக்கள் சபை) அமைப்பினர் கிளப்பினர். இதுதொடர்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் மனுவும் அளித்தனர்.இந்த பின்னணியிலேயே உத்தரப் பிரதேசத்தின் துணை முதல்வரான கேசவ் பிரசாத் மவுரியா, வியாழனன்று அளித்த பேட்டி ஒன்றில் அலகாபாத் மாவட்டத்தின் பெயரை, ‘பிரயாக் ராஜ்’ என மாற்றுவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்திற்கு ‘பிரயாக்’ என்று பெயராகும். இதனையே அலகாபாத்திற்கும் சூட்ட, ஆதித்யநாத் அரசு முடிவு செய்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: