நீலகிரி,
நிபா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கேரள – தமிழக எல்லையான நீலகிரி மாவட்டத்தில் சுகாராத்துறையினர் தீவிர ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பெரம்பிரா கிராமத்தில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு மூன்று பேர் பலியாகினர். வௌவால் கடித்த மரத்திலிருந்து அழுகிய பழங்கள், நீர் நிலைகளில் விழும் இந்த நீரினால் நிப்பா வைரஸ் தொற்று ஏற்படுகிறது.

இந்த தொற்றுகளினால் பாதிக்கப்படுவர்கள் 12 முதல் 48 மணி நேரத்தில் கோமா நிலைக்குச் சென்று மரணம் ஏற்படும் அளவிற்கு கொடுமையான பாதிப்பு இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே. இந்த வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் வகையில் கேரள மாநில எல்லைப்புற மாவட்டமான நீலகிரியிலுள்ள நாடுகாணி, நம்பியார்குன்னு, சோலாடி, தாளுர், பாட்டவயல், கக்கண்டி ஆகிய சோதனைச் சாவடிகளில் தலா இரண்டு சுகாதார ஆய்வாளர்கள் 24 மணி நேரமும் தமிழகத்திற்குள் வரும் சுற்றுலா பயணிகளை கண்காணித்து, நோய் அறிகுறி உள்ளவர்கள் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்கு அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும். நீலகிரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லைப்பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் நிபா வைரஸ் தாக்குதலை தவிர்க்கும் முறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள், தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் மூலம் நோய் பற்றிய விழிப்புணர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நான்கு மருத்துவ குழுக்கள் எல்லைப்குதிகளில் உள்ள கிராமங்களில் முகாமிட்டு தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இம்மாவட்ட மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு நிபா தொற்றின் அறிகுறிகளான தலைவலி காய்ச்சல், இருமல், உடல்சோர்வு, மூச்சுத்திணறல், உடல்வலி, மற்றும் சுயநினைவு மாறுபடுதல் (மூளைக்காய்ச்சல்) போன்றவை தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர். ஜெ.இன்னசென்டு திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: