நாமக்கல்,
திருச்செங்கோடு அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்தவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்துள்ள ராயர்பாளையம் நெருங்காடு பகுதியை சேர்ந்த பாவாயி (70). இவரை கடந்த 18.-10.-2016 அன்று கொலை செய்த மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய திருச்செங்கோடு புறநகர் காவல்துறையினர் ராசிபுரத்தை அடுத்துள்ள தொப்பம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (17) மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நாமக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் விசாரனை முடிந்து மகளிர் நீதிமன்ற நீதிபதி இளங்கோவன் வெள்ளியன்று தீர்பளித்தார். இதில் மூதாட்டி பாவாயியை கொலை செய்த மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.4 ஆயிரம் அபராதமும், தினேஷ் குமாருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: