22 ம் தேதி காலையில முதல்ல ஒரு அப்பாவிய கொல்லும் அடுத்த பத்து நிமிசத்துல ரோட்ல இறங்கி ஆர்ப்பாட்டம் பண்ணினோம். நேரம் ஆக ஆக காக்கா குருவிய சுட்டு கொல்றத போல பத்துக்கும் மேல நிறைய பேர கொன்னுட்டானுங்கனு தெரிஞ்சதும் தமிழ்நாட்ல நம்ம மக்கள் எல்லோருமே கண்ணீர் விட்டோம் சில சில்ற நாயிங்கள தவிர, அவனுங்க எல்லோருமே யாருனு எல்லோருக்குமே தெரியும்.. சரி 23ம் தேதி மறுநாள் போய் என்னதான் நடக்குனு போகலாம்னா நிறைய வழக்கறிஞர்கள் போனோம் எங்கல வழியிலயே தடுத்திட்டாங்க, உடனே அன்னைக்கே சென்னை உயர்நீதிமன்றத்தில மனு தாக்கல் பண்ணி வழக்கறிஞர் திரு.ஜிம்ராஜ் மில்டன், திரு.பார்வேந்தன் அண்ணன் வழக்கறிஞர்கள் எல்லோருமே அவர்களுக்கான சட்ட உதவிக்கு செல்லனும்னு ஆர்டர் வாங்கிட்டு வந்தாங்க, 23ம் தேதி ஆர்டர் வாங்கிட்டு 24 ம் தேதி நெல்லை வந்து திருநெல்வேலி வழக்கறிஞர்களும் ஒன்னா சேர்ந்து, கூடவே தானாகவே வந்த மதுரை, தஞ்சாவூர் வழக்கறிஞர்களும் கூடுதலாக வர ஒரு பெரும் கூட்டத்தோட தூத்துக்குடி போனோம். முதல்ல தூத்துக்குடி நீதிமன்றம் சென்று மாவட்ட நீதிபதிகளை பார்த்து அவரிடம் முறையிட்டோம். போலீஸ் லாக்கப்ல நிறைய பேரு புடிச்சி வச்சிருக்காங்க கிட்டத்தட்ட 200 பேர் மேல இருக்காங்க இதனால யாருலாம் உயிரோடு இருக்கா? யாரெல்லாம் கொல்லப்பட்டிருக்காங்கனு தெரியல, அதனால அவங்களை எல்லாம் கோர்ட்டுக்கு கொண்டு வர Searching warrant வாங்கி நாங்களே நேரடியா காவல் நிலையம் சென்று புடிச்சி வச்சிருக்குற அப்பாவி மக்கள எல்லாத்தையுமே கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்தோம். அதுக்குள்ள இவர்களை எல்லாம் சொந்த ஜாமீன்ல விடனும்னு இன்னொரு சீனியர் அட்வகேட்ட வச்சி அதுக்கும் ஒரு ஆர்டர் வாங்கினோம். அந்த ஆர்டர வச்சி புதுக்கோட்ட ஸ்டேசன்ல போட்ட கேஸ்ல 65 பேர கோர்ட்டுக்கு கொண்டு வந்து அவங்க பெற்றோருக்கு தூத்துக்குடி வழக்கறிஞர்கள வச்சி தகவல் சொல்லி அவங்க குடும்பத்தாரிடம் ஒப்படைச்சோம். அடுத்து South zone போலிஸ் ஸ்டேசன்ல ஒரு 35 பேரு நேரடிய போய் போலீஸ் S.P ய வர சொல்லி கோர்ட்ல ஒப்படைக்க சொல்லி அவங்களையும் அவங்க குடும்பத்தார்கிட்ட ஒப்படைச்சோம்.. மீதி போலீஸ் ஸ்டேசன்ல இருக்க அப்பாவிகள இன்னைக்குள்ள வெளிய கொண்டு வந்திடுவோம். இவங்கள எல்லாம் அரஸ்ட் பண்ணி ரெண்டு நாளா போலீஸ் வேன்லயே வச்சி அடிச்சிருக்கானுங்க நாதாரிங்க.. நாம இவளோ தேடலனா அல்லது Pressure கொடுக்கலனா பத்து பேரயாவது போட்டு தள்ளிட்டு கணக்குல சேர்க்க தெரியாதவனுங்களா அவனுங்க..
-பதிவு தொடரும்.
(வீடியோவுல South zone ல பொய் கேஸ் போட்ட 36 பேரும்)

Leave a Reply

You must be logged in to post a comment.