ஆட்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்திய போராட்டத்தில் 14 பேர் காவல்துறையினரால்  சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இது முன்திட்டமிட்ட படுகொலையே என்பதற்கான பல்வேறு ஆதரங்கள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

அதன் படி தற்போது பமாதேவ் என்ற செய்தியாளர் வீடியோ ஆதாரத்துடன் பல்வேறு கேள்விகளை  முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை நோக்கி எழுப்பியிருக்கிறார்.  அதில் குறிப்பாக கலெக்டர் அலுவலக வாயிலில் இருக்கும் 2 சிசிடிவி கேமராவும் சொல்லி வைத்தார் போன்று தரையை நோக்கி திருப்பப்பட்டுள்ளது. கேமரா உடைக்கப்படவில்லை அதை யாரும் தாக்கியது போன்றும் தெரியவில்லை.

ஆனால் கலெக்டர் அலுவலக நுழை வாயில் கதவிற்கு மேல் உள்ள இரண்டு கேமராவும் தரையை பார்த்து செங்குத்தாக உள்ளது. அந்த கேமராக்கள் உயரத்தில் இருப்பதால் அதை உடைப்பது என்பது எளிதல்ல எனவும் அவர் கூறுகிறார்.

கலெக்டர் அலுவலகத்திற்குள்ளே பொதுமக்கள் புகுந்தார்கள் என்றால் அதன் சிசிடிவி காட்சிகளை காட்டுக் எனக் கேட்கப்படும் போது கேமரா வேலை செய்யவில்லை எனக் கூறுவதற்காகவா ?  அல்லது மெரினாவில் நடந்தது போன்று நடந்தவைகள் சிசிடிவியில் பதிவாகிவிடக் கூடாது என்பதற்காகவா?  என்று கேள்வி எழுப்புகிறார்.

சிசிடிவி கேமரா தரையை நோக்கி திருப்பப்பட்ட காரணம் என்ன ? இதே அந்த நிருபர் எழுப்பும் முக்கிய கேள்வி. மேலும் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய ஒரே ஒரு வழி மட்டும் தான் உள்ளது. எப்படி வாயிலில் இருந்த அத்தனை  போலிசையும் மீறி பொதுமக்கள்  உள்ளே நுழைந்து வாகனத்தை கொழுத்தியிருக்க முடியும் ? என கேள்வி எழுப்புகிறார்.  அவர் இதற்கு மற்றொரு விசயத்தையும் நேரடியாக காட்டி பேசுகின்றார்.

கலெக்டர் ஆபிசிற்குள் இருந்த வாகனங்கள் கொழுத்தப்பட்டது. அப்படி கொழுத்தப்பட்ட அனைத்து வாகனங்களுமே தீபெட்டியை அடுக்கி  வைத்த மாறி வரிசையாக குப்புற சாய்த்து நிற்க வைக்கப்பட்டுள்ளது. இதை சுட்டிகாட்டிய நிருபர் கலவரத்தில் பொதுவாக ஈடுபடுபவர்கள் இப்படி யோசித்து எல்லாம் வண்டியை சாய்த்து கொழுத்துவதும் பழக்கம் இல்லை.

சாய்த்தால் தான் நன்றாக எரியும் என்ற சிந்தனையெல்லாம் அந்த கலவர நேரத்தில் அவர்களுக்கு எழ வாய்ப்பில்லை.  நான் இங்கே இருந்தவர்களிடம் கேட்டேன் பொதுமக்கள் யாரும் இதை செய்யவில்லை எனக் கூறுகின்றார்கள். நான் எந்த பக்கமும் பேசவில்லை நடுநிலையாக கேள்விகளை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு வைக்கின்றேன் பதில் கிடைக்குமா என அவர் அந்த காணொளியை …. முடிக்கிறார்..
#Killer_Vedanta
#Dont_Invest_in_Vedanta
#Shut_Vedanta
#Vedanta_against_Humanity

#SterliteProtest

– பனி ராஜா

Leave a Reply

You must be logged in to post a comment.