திருப்பூர்,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து வெள்ளியன்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்த நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதிலும், கடையடைப்பு மற்றும் பல்வேறு பகுதியில் சாலை மறியல் போராட்டமும் நடந்தது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும், திருப்பூர் மாநகராட்சி அருகில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த மறியல் போராட்டத்தில் தொமுச.மாநில துணை செயலாளர் டி.கே.டி.நாகராஜ், மாநகர பொறுப்பாளர் மேங்கோ பழனிசாமி, மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், கோவிந்தசாமி, செந்தில்குமார், தினேஷ்குமார் மற்றும் சிபிஐ மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்ட 100 பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து, தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர்.

தமிழர் மரபு வழி இயக்கம் :
திருப்பூர் மாநகராட்சி அருகே தமிழர் மரபு வழி இயக்க ஒருங்கிணைபாளர் அறிவழகன் தலைமையில்இளைஞர்கள் மறியல் போரட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர் .

Leave A Reply

%d bloggers like this: