திருப்பூர்,
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தூப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளியன்று வேலைநிறுத்தம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் நடைபெற்ற கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் 2,000 ஆயிரம் பின்னாலாடை நிறுவனங்களும், அதை சார்ந்த பிரிண்டிங், டையிங், காம்பாக்டிங் உள்ளிட்ட நிறுவனங்களும் இயங்கவில்லை. மேலும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதே போல் அனுப்பபாளையம் பாத்திர தொழிலாளர்களும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் 20,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த போராட்டத்தின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக தொழில்துறையிளர் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: