உதகை,
அதிகரட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பானவிழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.நீலகிரி மாவட்டம், அதிகரட்டி, ஜெகதளா, உலிக்கல் பேரூராட்சிகளின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் ஜந்தாம்ஆண்டு நிறைவு விழா மற்றும் விழிப்பணர்வு கூட்டம் அதிகரட்டியில் நடைபெற்றது. அதிகரட்டி. ஜெகதளா செயல் அலுவலர்கள் நந்தகுமார்,குணசேகரன் ஆயிர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அதிகரட்டி ஊர் தலைவர் பெள்ளன் முன்னிலை வகித்தார். இதில்சிறப்பு விருந்தினர்களாக வருவாய் ஆய்வாளர் வசந்த், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் குமார் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

இதைத்தொடர்ந்து மருத்துவ அதிகாரி ரேவதி, திடக்ழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்து கூறினார். குறிப்பாக திடக்கழிவு, மக்கும் மற்றும் மக்கா குப்பைகளால் ஏற்படும் நன்மை, தீமைகளை விளக்கினார். மேலும், திடக்கழிவுகளில் பணிபுரியும் மகளிர் குழுக்களுக்கு பாராட்டு தெரிவித்து, அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினர். இந்நிகழ்வில் அதிகரட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் வெள்ளை ரோஜா மற்றும் தென்றல் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.