கோவை,;
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வாழ்க்கை தொழிற்கல்வி (ஐ.,டி.ஐ), பாலிடெக்னிக், பட்டயப்படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல் மற்றும் மருத்துவம், எம்.பில், ஆராய்ச்சி படிப்பு முதலான படிப்புகளுக்கு கிருத்துவர், இஸ்லாமியர்,புத்த மதத்தினர், சீக்கியர், ஜைன் மற்றும் பார்சி மதத்தை சார்ந்த சிறுபான்மையினர் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை வழங்கப்படும். உதவித் தொகை திட்டத்தின் கீழ் தேசிய அளவில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. www.scholarships.gov.in வாயிலாக மத்திய அரசின் மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, 2018-19 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெறும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் கல்லூரிகளும் மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்து பயனீட்டாளர் குறியீடு பெற வேண்டும்.மேலும் ஏ.ஐ.எஸ்.எச்.ஈ எண் மற்றும் கல்வி நிலையத்தின் பெயர் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தால் அதுபற்றி உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஏ.ஐ.எஸ்.எச்.ஈ எண் பெறாத கல்வி நிலையங்கள் மத்திய அரசின் www.aishe.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் எனவும்,மேலும் இதுகுறித்த சந்தேகங்களுக்கு பள்ளிகள் முதன்மை கல்வி அலுவரை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் ந.ஹரிகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.