கோபிச்செட்டிபாளையம்,
கோபிசெட்டிப்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் வியாழனன்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோபிசெட்டிப்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் வியாழனன்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் 50க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையில் சாய்ந்ததால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக, பொலவக்காளிபாளையம், தாசம்பாளையம், ஒத்தகுதிரை உள்ளிட்ட பகுதியில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் ஏராளமான மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டதுடன், ஈரோடு- சத்தியமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர், கோபி காவல்துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். இதன்பின்னரே போக்குவரத்து சீரானது. இதேபோல் மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே கனமழை காரணமாக பொம்மநாய்க்கன்பாளையத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் கோழி பண்ணை முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதனால் பண்ணையில் இருந்த 2 ஆயிரம் கோழிகள் பலியானது. மேலும், பொலவக்காளிபாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி முன்பு இருந்த பெரியமரம் பள்ளியின் சுற்றுச்சுவர் மீது விழுந்ததால் சுற்றுச்சுவர் சேதமானது

Leave a Reply

You must be logged in to post a comment.