தாராபுரம்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் புதிய அலுவலக திறப்புவிழா நடைபெற்றது.

தாராபுரம் அரசு பேருந்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா கிளை தலைவர் கே.வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்றது. ஈரோடு மண்டல துணை செயலாளர் என்.நடராஜன் வரவேற்றார். ஈரோடு மண்டல துணை செயலாளர் ஆர்.சண்முகம் கொடியேற்றி வைத்தார். மாநில பொதுசெயலாளர் கே.கர்சன் அலுவலகத்தை திறந்து வைத்தார். நிர்வாககுழு உறுப்பினர்கள் என்.முத்துச்சாமி, கே.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். தகவல் பலகையை நிர்வாக குழு உறுப்பினர் மீர்சிராஜீதீன் திறந்து வைத்தார்.

மேலும், மாநிலதலைவர் கிருஷ்ணன், மாநில பொதுசெயலாளர் பி.செல்வராஜ், மாநில துணை பொது செயலாளர் ஆர்.தேவராஜ், மாநில துணை தலைவர் ஆர்.சேது
ராமன், ஈரோடு மண்டல தலைவர் ஏ.ஆனந்தன், ஈரோடு மண்டல பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராமன், ஈரோடு மண்டல பொருளாளர் கே.என்.துரைசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மற்றும் சகோதர சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக, கிளை செயலாளர் என்.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: