13 தோட்டாக்கள்

எங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன
உங்களிடம் 13 உயிர்கள் இருக்கிறதா ?

எங்களிடம் வாக்குகள் இருக்கின்றன
உங்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றன

எங்களிடம் கதர்ச்சட்டைகள் இருக்கின்றன
உங்களிடம் காக்கிச்சட்டைகள் இருக்கின்றன

எங்களிடம் தடித்த தோல் இருக்கிறது
உங்களிடம் தடிகள் இருக்கின்றன

எங்களிடம் கண்ணீர் இருக்கிறது
உங்களிடம் கண்ணீர்புகைக்குண்டுகள் இருக்கின்றன

எங்களிடம் கோரிக்கைகள் இருக்கின்றன
உங்களிடம் கட்டுப்பாடுகள் இருக்கின்றன

நாங்கள் வாழ வழி கேட்கிறோம்
நீங்கள் சாக வழி காட்டுகிறீர்கள்

நாங்கள் உரிமைக்கு போராடுகிறோம்
நீங்கள் மறுத்து மழுங்கடிக்கிறீர்கள்

நாங்கள் வேண்டாம் என்கிறோம்
நீங்கள் துணிந்து திணிக்கிறீர்கள்

நாங்கள் வாய்திறந்து பேசுகிறோம்
நீங்கள் வாயிலேயே சுடுகிறீர்கள்

நாங்கள் ஜனநாயகம் என்கிறோம்
நீங்கள் சர்வாதிகாரம் என்கிறீர்கள்

எங்களிடம் 13 தோட்டாக்கள் இருக்கின்றன
உங்களிடம் 13 உயிர்கள் இருக்கிறதா ?

– விதுபாலா

Leave a Reply

You must be logged in to post a comment.