சென்னை:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.செந்தில், மாநிலச் செய
லாளர் எஸ்.பாலா ஆகியோர் கூட்டாகவிடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் திட்டமிட்டு துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்திய தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மகேந்திரன் வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை உடனே கைது செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடசென்னை மாவட்டக்குழு
சார்பில் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டம் நடத்திய வட சென்னை மாவட்டச் செயலாளர் கார்த்திக், தலைவர் சரவணத்தமிழன், எஸ்எப்ஐ மாவட்ட செயலாளர் இசக்கி உள்ளிட்ட 6 பேரை காவல்துறை ரிமாண்ட் செய்துள்ளது.ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு,நடத்திய எஸ்பி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தினால் ரிமாண்ட் செய்வது என காவல்துறை அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. மக்களுக்காக போராடும் வாலிபர் சங்க தோழர்களை சிறையில் அடைக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும். மே 25  நடைபெறும் முழுஅடைப்பை மாபெரும் வெற்றிபெறச் செய்வோம்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், துப்பாக்கி சூட்டில் இறந்த
வர்களுக்கு நியாயம் கேட்டும், சிறையில் அடைத்த வாலிபர் சங்க தோழர்களை விடு
தலை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.

Leave A Reply

%d bloggers like this: