Free Software Foundation Tamil Nadu – FSFTN தூத்துக்குடியில் நடந்த படுகொலையும் அதை தொடர்ந்து அங்கு நடைபெற்றுவரும் மக்களை ஒடுக்கும் இந்த அரசின் அடக்கு முறையும் நாம் அறிந்ததே.. மேலும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர அங்கு உள்ள மக்களின் இணைய சேவையை முடக்கியுள்ளது தமிழக அரசு, தனி நபர் இணைய சுதந்திரத்தை பறிப்பதோடு மட்டுமல்லாமல் தூத்துக்குடி மக்களின் நியாயமான போராட்டத்தை முடக்கி வைப்பதை தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் கழகம் வன்மையாக கண்டிக்கிறது..

போராட்டத்தில் ஒருங்கிணைக்கும் மக்களின் இணைய சேவைக்கு மாற்று வழியை கீழே உள்ள ஆன்ட்ராய்டு செயலியின் மூலம் பெறலாம்.

இந்த செயலியின் மூலம் மக்கள் அனைவரும் இணைய வசதி இல்லாமலே இந்த ஆன்ட்ராய்டு செயலி வழியாக ஒருவர் மற்றொருவரை தொடர்புகொள்ள முடியும், தகவல் பரிமாறிக்கொள்ளலாம்.

முக்கியக் குறிப்பு: இணையத்திலும் சரி, Mesh நெட்வொர்க்கிலும் சரி, வருகின்ற எந்த ஒரு செய்தியையும் உடனடியாக உணர்ச்சி பூர்வமாக அணுகாமல், சற்றே நிதானத்தோடு உண்மைத் தன்மையை அறிய முற்பட்டு பின் செயல்படுங்கள் என தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் கழகம் தெரிவித்துள்ளது.

Links:-

[1] https://f-droid.org/repo/org.disrupted.rumble_16.apk (Common to all) – (Rumble App in F-Droid)
[2] https://play.google.com/store/apps/details?id=org.disrupted.rumble (Rumble App in Play Store)
[3] https://briarproject.org/fdroid.html (For Journalists) – (Briar App in F-Droid)
[4] https://play.google.com/store/apps/details?id=org.briarproject.briar.android (BriarApp in Play Store)

Leave A Reply

%d bloggers like this: