– இரா.ஜோதிராம்                                                                                                                                                  தூத்துக்குடி துயரக்குடி ஆனது
இரண்டு நாட்களில்!
இனி அது போர்க்குடியாகும்
வரலாற்றில்!

குற்றம் என்ன செய்தார்கள்
கொற்றவனே!
கொடநாட்டில் குடியுரிமை
கேட்டானா?
தெர்மாக்கோலில்
படகு கேட்டானா?

ஸ்டெர்லைட் புகை என்ன
சாம்பிராணி புகையா?
மூச்சுமுட்ட இழுத்து மகிழ!
அவ்வளவும் ஆட்கொல்லி விஷம்.
புற்றுநோயின் பிறப்பிடம்.

விவசாயம் வீழ்ந்தது,
கால்நடைகள் மாண்டன
தாயின் கருவறையில்
தகித்தன குழந்தைகள்
இருபத்து ஆண்டுகளாக
எடுத்துச் சொன்னான்,
எதுவும் நடக்கவில்லை
எனவே, பேரணியாய் வந்தான்
நீயோ, போர் தொடுக்க வருகிறான் என
புத்திக்குறைவால் புரிந்து கொண்டாய்
காக்கை, குருவிகளைப் போல்
சுட்டாய்.

கை, கால்களை ஒடித்தாய்
முத்துநகர் மொத்தமும்
செத்தனவனின் ஓலம்!
அடுக்குமா இந்த அடக்குமுறை?
அதிகார திமிரால் வந்தது இந்த நிலை!

எளிய ஊர்குருவிகள்
ஒன்று சேர்ந்தால்
ராஜாளியின் ரோமம் கூட
மிஞ்சாது என்பதை
கொஞ்சமாவது புரிந்துகொள்!

அடக்கு முறைக்கு அடங்காது
இந்த ஆர்ப்பரிப்பு.
வேதாந்திக்கு விலை போவதை
தடுக்காமல் நிற்காது
முத்துக் கடல் அலை.

Leave a Reply

You must be logged in to post a comment.