திருப்பூர்,
திருப்பூர் அனுப்பர்பாளையம் வாரச் சந்தை பகுதியில் புதியதாக திறக்க இருந்த டாஸ்மாக் கடையை வியாழனன்று பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அனுப்பர்பாளையம் வாரச் சந்தை பகுதியில் உள்ள ஏ.வி.பி ரோடு பகுதியில் அரசு பள்ளிகள், வாரசந்தை மற்றும் வழிபாட்டுதலங்கள், குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறப்பதாக அறிவித்தனர். அப்போது, மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றது. மேலும், அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதனால் கடை திறப்பதற்கான முயற்சியை கைவிட்டனர். இந்நிலையில், வியாழனன்று கடை திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

இதையறிந்த பொதுமக்கள் கடையின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் பிறகு பொதுமக்கள் பேரணி சென்று, டாஸ்மாக் கடையை திறந்தால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு செல்வதாக முழக்கமிட்டனர். இதில், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ் மற்றும் நகரக்குழு உறுப்பினர்கள், தமிழ்மாநில காங்கிரஸ் நகர நிர்வாகிகள் மற்றும் 100 பெண்கள் உட்பட 150 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும், டாஸ்மாக் மேலாளர், மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் ஆகியோருக்கு மனு அளிப்பதாக கூறினார்கள்.

Leave A Reply

%d bloggers like this: