திருப்பூர்,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது தமிழக காவல் துறையினர் காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை நிகழ்த்தியதைக் கண்டித்து வியாழனன்று மார்க்சிஸ்ட் கட்சி,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் சாலை மறியல் ,ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் காந்தி சிலை முன்பாக இந்தசாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சாவித்திரி, மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்ராதேவி, பொருளாளர் ஏ.சகிலா உள்பட ஏரளாமானோர் கைது செய்யப்பட்டனர்.

ஊத்துக்குளி :
ஊத்துக்குளியில் மார்க்சிஸ்ட்கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாப்பம்பாளையம் கிளை செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா செயலாளர் சிவசாமி மற்றும் தாலுக்கா குழு உறுப்பினர் குழந்தைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

பிஎஸ்என்எல் ஊழியர்கள்
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் பல்லடம் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கிளைத் தலைவர் கல்யாணராமன் தலைமை ஏற்றார். மாவட்ட உதவிச் செயலாளர் காந்தி, தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்ட உதவித் தலைவர் சண்முகம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைச் செயலாளர் கிரிஸ்ட்டி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக முருகானந்தம் நன்றி
கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.