திருப்பூர்,
திருப்பூர் முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பொன்னுலிங்கத்தின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது குடும்பத்தார் சார்பில் செவ்வாயன்று ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருப்பூரில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவராக செயல்பட்டவர் மூத்த தோழர் பொன்னுலிங்கம். இவரது 5 ஆம் ஆண்டு நினைவு நாள் மே 22ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இவரது நினைவு நாளன்று திருப்பூர் காங்கயம் சாலை விஜயாபுரத்தில் உள்ள பிரைட் பப்ளிக் பள்ளியில் நினைவு நிகழ்வு நடத்தப்பட்டது.இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தீக்கதிர் விநியோகிஸ்தர்கள் 40க்கும் மேற்பட்டோருக்கு மழைகோட்டுகளும், மிகவும் பின்தங்கிய 13 குடும்பங்களுக்கு தலா ரூ. 1000 வீதமும், விஜயாபுரம் அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ரூ. 10ஆயிரம் என ஒரு லட்சம் ரூபாய்கான நல திட்ட உதவிகளை பொன்னுலிங்கத்தின் மகன்களான, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.மோகன் மற்றும் தமாகா மாவட்ட நிர்வாகி பொன் சேதுபதி ஆகியோர் வழங்கினர். இதில் மார்க்சிஸ்ட் கட்சி தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி மற்றும் கட்சி அணியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: