கோவை,
டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சிபிஐயின் அறிக்கைக்கு விஷ்ணுபிரியாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் வழக்கை ஒத்திவைத்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர துணை காவல் கண்காணிப்பாளரான விஷ்ணுபிரியா, கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தனது முகாம் அலுவலகத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவர் கோகுல்ராஜ் மரணம் தொடர்பான வழக்கைவிசாரித்து வந்த நிலையில், உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து தனது மகள் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதைத்தொடர்ந்து சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கை கைவிடுவதாக கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த மாதம் 16 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை 3வது தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, பதில் மனு தாக்கல் செய்ய ஒரு மாத காலம் அவகாசம் கேட்டார். இதையடுத்து, வழக்கை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வேலுசாமி உத்தரவு பிறப்பித்தார்.

Leave A Reply

%d bloggers like this: