திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலாவதியான தீயணைப்பான் சிலிண்டர் வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில்உள்ள தீயணைப்பான் சிலிண்டரை குறிப்பிட்ட தேதிக்கு ஒரு முறை மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தீயணைப்பான் சிலிண்டரின் காலக்கெடு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிந்துவிட்டது. இதை கவனிக்காமல் இன்று வரையிலும் காலாவதியான சிலிண்டர் தான் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் பொதுமக்களை காப்பாற்ற உதவாது. மேலும், மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் அலுவலகத்திலேயே இது போன்று இருப்பது சரிதானா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: