நான் உசுப்பேற்றி யாரும் காவல் துறையை எதிர்க்க போவதில்லை.

இதை வெறும் பயத்தினால் சொல்லவில்லை, களத்தில் நெஞ்சுரத்தோடு போராடிய மக்களை பெவியலனுக்கு இந்தப்பக்கம் உட்கார்ந்து “அதை செய், இதை செய்” என்று கையாலாகாத தனத்தை மறைக்க, வீரனாக காமித்துக்கொள்ள, பிறரை உசுப்பேற்றுவது அறம் அல்ல என்கிற அடிப்படையில் சொல்கிறேன்.

இந்த புகைப்படத்தை பாருங்கள், ஒரு இளைஞன், சுற்றி எண்ணிக்கையில் அடங்காத போலீஸ்.

எதையோ ஒன்றை சொல்கிறான், அந்த முகத்தில் சர்வ நிச்சயமாய் பயம் இல்லை. அவன் பிறந்ததில் இருந்து போலீசால் ஒழுங்கப்படுத்தப்பட்டவனல்ல, எந்த அதிகாரமும் அவனை இயக்கவில்லை, இந்த சமூகத்தில் நிலவும் பொதுவொழுக்கமும், அறம் என்று ஏதோவொன்று தான் உங்களையும் என்னையும் போல அவனை வழிநடத்தி இருக்கும்.

போலீசுக்குத்தான் நினைப்பு, அதிகாரிகளை பார்த்தவுடன் குனிவதை போல அதிகாரம் எல்லோரையும் குனிய வைத்து விடுமென்று.

இந்த frame க்கு அடுத்த frame அவன் அடிபட்டிருக்கலாம், ஆனால் அதிகாரத்திற்கு எதிரான கேள்விகள் அடங்கிய அவனது பார்வையில் தோற்றது போலீஸ் தான்.

வாசுகி பாஸ்கர்

Leave A Reply

%d bloggers like this: