சேலம்,
கமலேஷ் சந்திரா அறிக்கையின் சாதகமான பரிந்துரைகளை அமலாக்கக்கோரி வியாழனன்று மூன்றாவது நாளாக அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றும் கிராம புற அஞ்சல் துறை ஊழியர்கள் சரிபார்ப்பு முடித்து அதன் முடிவினை உடனே வெளியிட வேண்டும். கமலேஷ் சந்திரா அறிக்கையின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். மேலும், 18 மாதங்கள் கடந்தும் 7 ஆவது ஊதிய குழுவை வெளியிடாமல் உள்ள மத்திய அரசை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதன்ஒருபகுதியாக மூன்றாவது நாளாக வியாழனன்று சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர். இதனால் அஞ்சலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மேலும், சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் சி.பி. நாராயணன், சி.ரவீந்திரன், எஸ்.சரவணன், எஸ்.வி.லோகநாதன், வி.ராமு உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

கோவை:
இதேபோல், கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் பணிகளை புறக்கணித்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும், பொள்ளாச்சி தலைமை அஞ்சல் துறை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர் சங்கத்தின் சங்கத்தின் நிர்வாகிகள் ஜவகர், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: