ஆட்கொல்லி, ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராட்டம் நடத்திய 13 பேரை காவல்துறை சுட்டு கொன்றது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் துப்பாக்கி சூட்டை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

மோடி அரசிற்கு நெருக்கமான வேதாதந்த குழுமத்தை சேர்ந்த ஸ்டெர்லைட் ஆலை எவ்வித அரசு விதிமுறைகளையும் பின்பற்றாமல் ஆலையின் 2 வது பிரிவை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்த ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து 100 நாட்களாக போராடி வந்தனர். இந்நிலையிலும் அரசு நிர்வாகம் அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் போராட்டத்தின் நூறாவது நாளான செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என போராட்டக்குழுவினர் தீர்மானித்து அறிவித்திருந்தனர்.

இதனை ஒடுக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். இதனை ஏற்க முடியாது. தொடர்ந்து அரசு நிர்வாகம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. எனவே நாங்கள் திட்டமிட்டபடி ஆட்சியர் அலுவலகம் செல்வேம் என அறிவித்து வந்தனார். ஆனால் ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள்  ஆட்சியர் அலுவலகத்தில் இல்லை. இந்நிலையில் காவல்துறையினர் ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பலர் உயிரிழந்தனர். பின்னர் தூத்துக்குடி நகரம் முழுவதும் போராட்டக்காரர்களை காவல்துறையினர் விரட்டி விரட்டி சுட்டுத்தள்ளினர். இதில் 12 பேர் பலியாகினர்.

இந்நிலையில் இன்று இறந்தவர்களின் பிரதேங்களை பெறுவதற்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவாதம் அளிக்க வேண்டும் என இறந்தவர்களின உறவினர்கள் கோரினர். ஆனால் அதனை அனுமதிக்காமல் காவல்துறையினர் மீண்டும் மருத்துவமனையில் இருந்தவர்களை விரட்டி அடித்தனர். பின்னர் தெருக்களில் ஓட விடடு 22 இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு அதிகரித்து வந்தது. இந்நிலையில் தற்போது தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் எஸ்.பி.மகேந்திரன் ஆகிய இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நீலகிரி மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா தூத்துக்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.  சென்னை (வடக்கு) போக்குவரத்து காவல் ஆணையர் சண்முகப்பிரியா நீலகிரி எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: