பெங்களூரு :

மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமார சாமி கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

அதிகபட்சமாகப்  பா.ஜ.க 104 இடங்களிலும் காங்கிரஸ் 78 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து குமாரசாமி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸின் ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

ஆனால், ஆளுநர் வஜுபாய் வாலா 104 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கொண்ட பா.ஜ.க-வின் எடியூரப்பாவை முதல்வராகப் பதவியேற்று வைத்தார். ஆனால், பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போனதால் எடியூரப்பா பதவி விலகினார். ஆனால், ஆளுநர் வஜுபாய் வாலா 104 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கொண்ட பா.ஜ.க-வின் எடியூரப்பாவை முதல்வராகப் பதவியேற்று வைத்தார். ஆனால், பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போனதால் எடியூரப்பா பதவி விலகினார். இதன்பின் குமாரசாமியை முதல்வராகப் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பையடுத்து, இன்று கர்நாடக முதல்வராகக் குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து பெங்களூரு விதானா சவுதானாவில் பதவி ஏற்பு விழா இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குமாரசாமி கர்நாடகாவின் 25 வது முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.  மேலும், அவருடன் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மூத்த தலைவர் பரமேஸ்வரா துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்.

மேலும், நேற்று நடந்த கூட்டத்தில் மொத்தம் 34 அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 22 அமைச்சர்கள் காங்கிரஸுக்கும், 12 அமைச்சர்கள் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கும் பிரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து நாளை குமாரசாமி சட்டசபையில் நாளை பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: