ஹைதராபாத்:
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயதான மகன் வைஷ்ணவ், திடீர் மரணம் அடைந்துள்ளார்.செகந்திராபாத் தொகுதி எம்.பி-யான பண்டாரு தத்தாத்ரேயாவின், ராம்நகர் வீட்டில், செவ்வாயன்று இரவு தத்தாத்ரேயாவின் குடும்பத்தினர் அனைவரும் உணவருந்திவிட்டு படுக்கச் சென்றுள்ளனர். அப்போது, திடீரென்று நெஞ்சுவலிப்பதாக வைஷ்ணவ் கூறியுள்ளார். குருநானக் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், நள்ளிரவு 12.30 மணியளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் வைஷ்ணவ் இறந்தார்.

எம்.பி.பி.எஸ் மூன்றாம் ஆண்டு படித்துவரும் வைஷ்ணவ், உடல் எடையைக் குறைப்பதற்காக டயட் கன்ட்ரோலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அவர் இறந்துள்ளார். மாரடைப்பால் அவர் இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.2 ஆண்டுகளுக்கு முன்பு, ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக தலித் மாணவர் ரோஹித் வெமுலா, சாதிய பாகுபாட்டால் உயிரை இழந்தார். அப்போது, ரோஹித்தின் சாவுக்கு காரணமானவர் என்று மாணவர்களின் கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் பண்டாரு தத்தாத்ரேயா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: