தூத்துக்குடி மாவட்டத்தில் மே 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி காலை 8 மணி வரை தூத்துக்குடி , திருச்செந்தூர் தாலுகாக்கள்,வேம்பார், குளத்தூர், ஆறுமுகமங்களம் , வேடநத்தம், ஓட்டப்பிடாரம், எப்போதும்வென்றான் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

மே 25 வரை 144 தடை உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமையன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படுமென மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது .18 பேருக்கு அறுவை சிகிச்சை
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் 42 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 18 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் மருத்துவத்துறை இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: