சென்னை :                                                                                                                                                                           தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திவரும் நரவேட்டையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வியாழனன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த கடையடைப்பு போராட்டத்தை முழுவெற்றி பெறச் செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயிர்கொல்லியான ஆலையான ஸ்டெர்லைட்டை மூடக்கோரி போராடும் மக்களை காக்கை, குருவிகளைப் போல தமிழக காவல்துறை சுட்டு படுகொலை செய்கிறது. இது மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாக வியாழனன்று கடையடைப்பு நடத்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் த.வெள்ளையன் மற்றும் பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த கடையடைப்புப் போராட்டத்தை முழு வெற்றிபெறச் செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். மாநிலம் முழுவதும் ஆவேசமான போராட்டங்களை மேலும் மேலும் முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.