ஸ்ரீநகர் :

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்த கும்பலுக்கு ஆதரவாக பாஜக தலைவர் சவுத்ரி லால் சிங் பேரணி நடத்திய அவலம் நாடு முழுவதும் பாஜகவின் முகத்தை கிழித்தது. அதைத்தொடர்ந்து, தற்போது லால் சிங்கின் சகோதரர் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்துவாவில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்ட லால் சிங்கின் சகோதரர் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வரை தவறான வார்த்தைகளால் வசை பாடியுள்ளார். கத்துவா கொலைக்கு சிபிஐ விசாரணை கோரி பாஜக அமைச்சர் லால் சிங் தலைமை தாங்கிய பேரணியில் அவரின் சகோதரர் சவுத்ரி ராஜிந்தர் சிங் அம்மாநில முதல்வர் மெக்பூபா முஃப்டியை கொச்சையான வார்த்தைகளால் சாடிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், இந்த சம்பவம் மிக மோசமானது எனவும், ஏற்று கொள்ள முடியாத ஒன்று எனவும் மற்றும் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: